தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து


Get Your Own Hindi Songs Player at Music Pluginதங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ... மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ


தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ..
அந்த தேவலோக மன்னவனும் நீயோ...


வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
அசைந்து.. தவிழ்ந்து ...அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓஒ

(தங்கத்தில்...)


முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து.. கனிந்து.. சிரித்து குலுங்கும் கனியாகவோ..
எந்தன் மணக்கோயிலில் தெய்வம் உன்னை காணுகிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்
இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காகவே.
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க.. கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே...

(தங்கத்தில்....)


படம்: மீனவ நண்பன்

பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்

7 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

பாஸ் கலக்கல் :)))


நேயர் விருப்பம் ரேஞ்சுல தட்டிவுட்டுட்டீங்க போல :))

அழகான பாடல்

வண்ணத்துபூச்சியார் said...

அருமை...

கானா பிரபா said...

பாஸ்

சூப்பரே

புதுகைத் தென்றல் said...

நேயர் விருப்பம் ரேஞ்சுல தட்டிவுட்டுட்டீங்க போல//

:))

புதுகைத் தென்றல் said...

நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

புதுகைத் தென்றல் said...

நன்றி பிரபா

Several tips said...

மிகவும் நன்று