படம்: ப்ரியமானவளே
பாடியவர்: யேசுதாஸ்
(பாடல் மட்டும் கிடைக்கவில்லை. படத்திலிருந்து ஒரு
பகுதி மொத்தமும் தான் கிடைத்தது)
கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா
கல்யாணம் என்பது பூர்வ பந்தம்
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்
சம்சாரம் என்பது ஆதி அந்தம்
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்
எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே
ஆயிரம் காலமே வாழுமே!
(கல்யாணம் என்பது...)
வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்
வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்
விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்
தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்
இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்
நீ ஏது நான் ஏது இங்கே?
நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா
(கல்யாணம் என்பது...)
ஆ..ஆ.....
தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்
தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்
தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்
தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்
பெண்ணின் பெருமை சொல்லவா
கடல் போன்றதல்லவா
நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்
அதற்கொரு உவமை தான் பெண்மையே
கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா.
Blessed with a velvety voice
13 years ago
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
பாடல் வரிகளை கோர்த்து கொடுத்த தம்பி நிஜமா நல்லவனுக்கு மிக்க நன்றி.
வணக்கம்,வடுவூர் குமார்,மங்களூர் சிவா,கிரி.,
அனைவர்க்கும் மிக்க நன்றியை தெரிவித்கொள்கிறேன்.
நான் இருக்கும் நாட்டிலேவும் வடுவூர் குமார் சொன்னதுபோல் ஒவ்வேறு நிடத்திகும் எண்கள் மாறும் ஒரு சிப் கொடுக்கிறார்கள். நம்ப ஊர் reliance மணி போல். வடுவூர் குமார்,மங்களூர் சிவா,கிரி வலை பதிவுகளை தினமும் படிப்பவன் நான். நிங்களே என் வலை பதிவுவிர்க்கு வந்து encourage செய்ததிற்கு மிக்க நன்றி
மிகவும் பிடித்த பாடல் இது.
//
கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா
//
இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியாது.
டிக்ஸ்னரியுடன் போட்டிருக்கலாம்....
கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா
இது ஒரு சமஸ்கிருத ஸ்லோகம்.
மனைவிக்கு ஒரு விளக்கம் என்று கூட சொல்லலாம்.
பணிவிடை செய்வதில் தாசி அதாவது வேலைக்காரியாக, தக்கசமயத்தில் தேர்ந்த ம்ந்திரியாக, உணவு பரிமாறுகையில் ஒரு தாயாக, ரம்பையைப் போல் இன்பம் தருபவளாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
இந்த பாடலை பாடியவர் உன்னிமேனன் அவர்கள் தானே...
இந்த வரிகளை எழுதிய பாலாசிரியர் யாருன்னு யாருக்காச்சும் தெரியுமா
Post a Comment