16.கண்ணே கலைமானே....




படம்:மூன்றாம் பிறை
இசை:இளையராஜா
பாடல்:கண்ணதாசன்
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ்



கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...



கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே


ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...



காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி...


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

pudugaithendral said...

ஆஹா சூப்பர் பாட்டு,

கானக்கந்தர்வனின் குரலில் இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனதை மெல்லிய மயிலறகால் யாரோ வருடியது போல இருக்கும்.

அதுக்கப்புறம் தூக்கம் சுகமா வரும்னு சொல்லவும் வேணோமோ!