Showing posts with label S.ஜானகி. Show all posts
Showing posts with label S.ஜானகி. Show all posts

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!



ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே....
சுகம் உறவாட தேடுதே .....
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

மாலை நேரக் காற்றில்
அசைந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
என ஆளும் தெய்வம் நீயே!!

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை,
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே!!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம், காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி
இசை: இளையராஜா

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்......




ஆ...ஆ...ஆஆ.


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.


பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன?
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன?
ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்.
மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்.
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி..
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்
நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூரட்டுமா
கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயமல் பாயுதம்மா

பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

படம்: எங்க முதலாளி
பாடியவர்கள்:கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...!



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.ஜானகி



தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்

(தென்றல் காற்றே..)

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

(தென்றல் காற்றே..)

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

(தென்றல் காற்றே..)

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே...!




படம் : தீபம்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி



பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி.....)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி.....)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி.....)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாக
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாளிதே
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி.....)

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது...!



படம்:நட்பு
பாடியவர்கள்:K.J.யேசுதாஸ் & S.ஜானகி



அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

(அதிகாலை சுபவேளை......... )

அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் தனியே
இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப்போகக் கூடாதே

(அதிகாலை சுபவேளை........ )

தென்றல் வந்து தீண்டினால் இந்ததளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

(அதிகாலை சுபவேளை.......)

மேகம் கருக்குது மழை வர பார்க்குது..!



படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து

(மேகம் கருக்குது...)

ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

(தொட்டு தொட்டு...)

தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்

(பூவுக்குள்ள..)

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

(கண்ணுக்குள்ள..)

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

(மேகம் கருக்குது...)

அரே வாரே வா... கரும்பூவே வா..!




படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்கள்:K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி


அரே வாரே வா... கரும்பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட

வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்... மாலை போலாட
வாரே வா.. இளம் பூவே வா

மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா.ப..ப..பா
மீசை எவ்வண்ணம் அதுவே உன்வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா..ப..ப..பா

கண்ணன் கூட என்வம்சம் வானில் பாரு என் அம்சம்
வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள்
வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும்மாரி
வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா

கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று
மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு
தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு


வாரே வா... கரும்பூவே வா
வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட
வாரே வா... இளம் பூவே வா