படம் : கேளடி கண்மணி
இசை : இளையராஜா
குரல் : K.J.ஜேசுதாஸ் & உமா ரமணன்
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
மானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணா
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
படம் : தூறல் நின்னு போச்சு இசை : இளையராஜா குரல் : கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
(பூபாளம் இசைக்கும்...)
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே மேகமழை நீராட தோகை மயில் வாராதோ தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனநனனா
(பூபாளம் இசைக்கும்...)
பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம் அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனநனனா
ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!
ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!
மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.
(ஆஹாய வெந்நிலாவே)
தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று.
தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்
அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?
இசை வீணை வாடுதோ? இதமான கைகளில் மீட்ட!
ஸ்ருதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட!
(ஆகாய வெண்ணிலாவே)
படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், உமா ரமணன்