படம் : அக்னி நட்சத்திரம்.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.யேசுதாஸ், சித்ரா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
Blessed with a velvety voice
14 years ago
1 இசை மழையில் நனைந்தவர்கள்:
//நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்//
எப்போதும் நான் ரசிக்கும் பாடல். பதிவிட்டதுக்கு நன்றி
Post a Comment