Showing posts with label பக்தி. Show all posts
Showing posts with label பக்தி. Show all posts

3. பொய்யின்றி மெய்யோடு....



பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.- சபரியில்
ஐயனை நீ காணலாம்.

(பொய்யின்றி மெய்யோடு)

ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.



அவனை நாடு
அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் - ஐயப்பன்
உன்னை புகழோடு
வாழவைப்பான்- ஐயப்பன்

இருப்பது காடு
வணங்குது நாடு அவனைக்
காணத்தேவை - பண்பாடு
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.



பூஜைகள் போடு
தூய அன்போடு
பெயரோடு
வாழவைப்பான் ஐயப்பன் - நல்ல
பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன்.


அனைவரும் வாருங்கள்
ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும்
அன்பரை எல்லாம்
வாழவைப்பான்.

அருள் வேண்டும்
அன்பரை எல்லாம்
வாழவைப்பான்

ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.

பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டுபோனால்
ஐயனை நீ காணலாம்- சபரியில்
ஐயனை நீ காணலாம்.


ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.
சரணம் ஐயப்பா. சரணம்... ஐய்யப்பா..

2. ஹரி வராசனம்.

ஐயப்பனின் நடை சாத்தும்போது பாடும் இப்பாடல்
கரோகே போல் ஆங்கிலத்தில்.




ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வமோஹனம்
ஹரிததீச்வரம் ஆராத்ய பாதுகம்.
அரிவிமர்த்தனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.
(சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா)


சரணகீர்த்தனம் ஸ்வாமி சக்தமானஸம்,
பரணலோலுபம் ஸ்வாமி நர்த்தனாஸம்.
அருண பாஸுரம் ஸ்வாமி பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ப்ரணய ஸத்யகம் ஸ்வாமி ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம் ஸ்வாமி ஸூப்ரபாஞ்சிதம்.
ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தன்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.



துரக வாஹனம் ஸ்வாமி ஸுந்தரானனம்,
வரகதாயுதம் ஸ்வாமி வேத வர்ணிதம்.
குருக்ருபாகரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

திரி புவனார்ச்சிதம் ஸ்வாமி தேவதாத்மகம்
த்ரிநயன்ம் ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசிகம்.
த்ரிதச் பூஜிதம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


பவபயா பஹம் ஸ்வாமி பாவுகாவஹம்
புவன மோஹனம் ஸ்வாமி பூதி பூஷனணம்.
தவள வாஹனம் ஸ்வாமி திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


களம்ருது ஸ்மிதம் ஸூந்தரானனம்
களப கோமளம் ஸ்வாமி காத்ர மோஹனம்.
களபகேஸரீ ஸ்வாமி வாஜி வாஹனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ச்ரித ஜனப்ரியம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸ்வாமி ஸாது ஜீவனம்.
ச்ருதி மனோஹரம் ஸ்வாமி கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா.

********************************************************

A SLOW SONG FOR LORD AYYAPPAN,SUNG BEFORE CLOSING THE SANCTUM DOORS OF LORD AYYAPPAN,THE PRIEST SINGS THE HARIVARASNAM BY THE TIME THE HARIVARASANAM COMES TO AN END NO ONE IS LEFT IN THE SANCTUM EXCEPT FOR THE MAL SAANTHI AND FINISHES THE HARIVARASANAM CLOSES THE SANCTUM DOORS OF LORD AYYAPPAN AND LEAVES THE PLACE

1. திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே..

SwamiAyyappan-Thir...




திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்குதிருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஉரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணாஇரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஇந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணாதேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயேகணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயேஅனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனிவருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


ஸ்ரீமன் நாராயணாஸ்ரீபதி ஜெகன்னாதாவருவாய்
திருமாலே - துணைதருவாய்
பெருமாளே.

***********************************************************
படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்