ஒரு ராகம் தராத வீணை...!

படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: இளையராஜா
ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை


நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆறும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது


ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை


இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது


ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது...!

படம் : மூன்றாம் பிறை
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஏசுதாஸ்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்

பூவானில் பொன்மேகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி
நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

தேவி கூந்தலோ பிருந்தாவனம்...!

படம்: என் ஆசை உன்னோடு தான்
இசை: சங்கர்-கணேஷ்
குரல்: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே உன் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

பூவானது பொன்னானது
உன் பாதம் மண்மங்கை காணாதது
பூவானது பொன்னானது
உன் பாதம் மண்மங்கை காணாதது
தோள்மீது சாயும் தேனாக பாயும்
தோள்மீது சாயும் தேனாக பாயும்
கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்
இளமங்கையின் கன்னத்தில் மன்மத வண்ணத்தில்
புதிய அமுதம் பொங்கிவரும்

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை
நீ தினமும் அணைத்து நினைவில் நிறுத்து
இதயம் திறந்து வந்தவளை

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

லால்ல லாலலலா லல்லா லலா..!

வானம் அருகில் ஒரு வானம்...!

படம்: நியாய தராசு
இசை: சங்கர்- கணேஷ்
குரல்: K.J.ஜேசுதாஸ்


வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம் பறவைகளின் கானம்

(வானம் அருகில் ஒரு வானம்...)

ஏழாண்டு காலம் இவள் ஊர் பார்த்ததில்லை
கார் போகும் சாலை இவள் கால் பார்த்ததில்லை
இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
இடைவேளையில் பண் கேட்கிறாள்
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டால்
வெளியேறினாள் கிளியாகினாள்

(வானம் அருகில் ஒரு வானம்...)

பூலோகம் சுகமே இந்த பொய் வாழ்க்கை சுகமே
பூந்தோட்டம் சுகமே அட போராட்டம் சுகமே
இவள் காண்பது புது தேசமா
இவள் கொண்டது மறு ஜென்மமா
கடந்து சென்ற காலம் கை வருமா
கண்ணீரிலே சந்தோஷமா

(வானம் அருகில் ஒரு வானம்...)

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே...!

படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்


(தென்பாண்டித் தமிழே...)


வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே


(தென்பாண்டித் தமிழே...)


தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே


கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
வாழ்த்துவேன் உனை போற்றுவேன்
வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே


(தென்பாண்டித் தமிழே...)