ஓ நெஞ்சமே என் பாடலைஅழகான குரல்களில் அமைதியான பாடல்.

படம்: பாசக்கனல்
நடிகர்: நிழல்கள் ரவி
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்:எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்:1989ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கைகோர்த்து நான் சென்ற காலங்கள்
மெய்யன்பின் மாறாத தின்னங்கள்
நீ கொண்ட வேறான என்னங்கள்
நிஜமென்றல் பெண்மைக்கு துக்கங்கள்

அறியாத பருவம் அல்ல எனது அன்பு கொண்டு
புரியாத பெண்மை உன்னை நான் என்ன சொல்வது

அன்பு கொண்டு பேசினால்
ஆசையென்று ஆகுமா
ஆண்களூக்கு ஆயிரம்
அர்த்தம் அது கூடுமா?

காலங்களின் கோலம் இது

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கனவோடு என் காதல் தீயாச்சு
கதை போல என் வாழ்வும் வீணாச்சு
விதை போட மரம் வேறு உண்டாச்சு
உயிர் கூடு புயல் வந்து பாழாச்சு

விதையென்ற கேள்வி ஒன்றை
ஏன்  நீ கேட்க வேண்டுமா
விளையாட்டு தோழன் உன்னை
என் மனம் ஏற்க வேண்டுமா

காத்திருந்த ஆண் கிளி
நேற்று தூங்கிப் போனது
பார்த்திருந்த வென் புறா
கைப் பிடித்து சென்றது

போதும் விடு போராட்டமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம்பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம் வானொலி தொகுப்பை  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். தாஸண்ணாவின் அருமை பெருமைகளை அனைவரும் தெரிந்திருந்த தகவல்கள் தான். இருந்தாலும் அவருடன் பணியாற்றிய போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லுகிறார்கள் அவரின் அபிமான நட்சத்திரங்களான டைரக்டர் திரு.பாசில், பாடகி ஜென்சி, அவர் புதல்வர் திரு.விஜய் யேசுதாஸ் ஆகியோர். நான்கு ஒலித்தொகுப்புகள் அனைத்தும் அருமையான பாடல் பொக்கிஷம் கேளூங்கள் அன்பர்களே. உஙக்ளூக்காக இதோ...


1.இன்று சொர்ர்கத்தின் திறப்பு விழா
2.நீலநயனங்க்ளில் ஒரு நீண்ட கனவு
3.தங்கத்தில் முகம் எடுத்து
4.அழகெனும் ஓவியம் இங்கே
5.தங்கத்தோனியிலே தவளும்
6.நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம்
7.திருமாளின் திருமார்ப்பில்
8.கங்கைநதி ஓரம் ராமன்
9.வானம் எனும் வீதியிலே
10.நாளை உலகை ஆளவேண்டும்

1010 KJJ-1

1.என்ன பார்வை உந்தன் பார்வை
2.கங்கை யமுனை இங்குதான்
3.ஸ்ரீதேவி என் வாழ்வில்
4.நல்ல மனம் வாழ்க
5.தீர்த்தகரைதனிலே சென்பக புஷ்பங்களே
6.என்ன சுகம் என்ன சுகம்
7.ஆகாயம் மேலே பாதாளம் கீழே
8.நினைவாலே சிலை செய்து
9.உன்னிடம் மயங்குகிறேன்

1011 KJJ-2

1.மீன் கொடி தேரில்
2.மனைவி அமைவதெல்லாம்
3.உறவுகள் தொடர்கதை
4.பூவிழி வாசலில் யாரடி வந்தது
5.ஏரிக்கரை பூங்காற்றே
6.வேதம் நீ இனிய நாதம் நீ
7.கிண்ணத்தில் தேன் வடித்து
8.கன்னன்  ஒரு கைகுழந்தை
9.செந்தாழம் பூவில் வந்தாடும்

1012 KJJ-3

1.ஏதோ நினைவுகள் கனவுகள்
2.என் இனிய பொன் நிலாவே
3.பொன்னான மேனி உல்லாசம்
4.கனவென்னும் ஆலைக்குள்
5.நிலை மாறும் உலகில்
6.மாலை பொன்னான மாலை
7.பூபாளம் இசைக்கும்
8.மூக்குத்தி பூமேலே
9.வெச்சப்பார்வை தீராதடி
10.காக்கை சிறகினிலே நந்தலாலா

நன்றி: பாசப்பறவைகள் தளம்

வண்ண மொழி மானே
 
படம்: சேதுபதி ஐ.பி.எஸ்
நடிகர்: விஜயகாந்த், மீனா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வருடம்:1994


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னைச் சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காலை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ணனியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துளங்கும் சக்தி நீயாகும்

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

ஓஹோ ஓஹோ ஓஹோ..ஓஹோ ஓஹோ ஓஹோ
கஸ்தூரி என்றொரு குலப் பெண் தானம்மா
கணவன் காந்தி புகழ் பேர வைத்தாள்
நாகம்மை என்றொரு தமிழ் பெண் தானம்மா
தந்தை பெரியார் பெருமையை காத்தாள்
நாவீரன் நேருவின் ஆதாரம் தான்
அஞ்சாத மனைவியின் அன்பு மனம் தான்
கமலா நேரு அவள் பேர் தானம்மா
புகழ்ந்தே பேசும் இந்த ஊர் தானம்மா
அதுபோல் எனக்கு நீதான் ஆதாரம்

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

கண்ணே உன் நாயகன் காவல் துறையிலே
கடமை உணர்ந்து உழைத்திடும் போது
ஊராரை காத்திடும் உயர்ந்த பணியிலே
இரவோ பகலோ உறக்கம் ஏது
காற்றோடு இடி மழை வந்தாலுமே
காப்பாற்ற போவது எங்கள் இனமே
காவல் காரன் தோளில் சுலபம் அல்ல
வார்த்தை ஏது இதன் புனிதம் சொல்ல
ஒரு நாள் எனைத்தான் தேசம் பாராட்டும்


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னை சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காலை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ண்னியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துளங்கும் சக்தி நீயாகும்


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

பாடலை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.