25.எங்கெங்கு நீ சென்ற போதும்..!!




படம் : நினைக்க தெரிந்த மனமே
இசை : இளையராஜா
பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா



எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்?
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்?
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

(எங்கெங்கு நீ சென்ற போதும்...)

மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

(எங்கெங்கு நீ சென்ற போதும்...)


பி.கு : இது 25-வது பதிவு. கானகந்தர்வனின் அனைத்து பாடல்களையும் இங்கு பதிவிட வேண்டும் என்றொரு கனவு இருக்கிறது. முடியும் என்ற நம்பிக்கைகளுடன்...!

6 இசை மழையில் நனைந்தவர்கள்:

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் கானக் கந்தர்வன் ரசிகர்களுக்கும்... பாடல்கள் வழங்குபவர்களுக்கும்... நன்றிகள்.. :)

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் பாரதி - எண்ணங்கள் ஈடேற நல்வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

25 வது போஸ்ட்டா அதுக்குள்ள, வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுடன் கேட்டு மகிழ்கிறேன்!

நன்றி :)

Unknown said...

ஆஹா அருமை..

Unknown said...

அருமை ........தொடர்க உமது சேவை......வாழ்த்துக்கள்