ரொம்ப வருடங்கள் கழித்து தாஸ்ண்ணா, எஸ்.பி.சைலஜா கூட்டணியில் வெளிவந்த இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் ரசிக்கும் படி உள்ளது. தாஸண்ணாவின் பேஸ் குரலும் சைலஜா மேடத்தின் கீச் குரலும் என்னவொரு கான்ட்ராஸ்ட் காம்பினேசன். வித்தியாசமா இனிமையாகத்தான் இருக்கிறது.கேட்டு மகிழுங்கள்
நதிக்கரை ஓரத்து நானல்களே
படம்:காதல் கிளிகள்
|
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளூங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே
தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன
கல்யாண செய்தியை கேட்டவுடன்
என் கால்கள் தொடவில்லையே
கரையை தொடாத அலைகளைப்போல்
உன் கரும்கூந்தல்?? கைகளில் விழுவதென்ன
காதலன் கைகளில் சுகம் பெறவே
என் தோள்கள் சரிந்து விழுந்ததய்யா
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளூங்களே
கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்
உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
மாலையும் கையும்?? வரும் வரைக்கும்
உன் மனதை மடக்க முடியாதா
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே
2 இசை மழையில் நனைந்தவர்கள்:
நாயகி அழகைப்பாடும் பாட்டு சூப்பர்.
பகிர்வுக்கு நன்றி ரவி
மேடம் மற்றவர்களின் பின்னூட்டங்கள் என்னால் பார்க்கமுடியவில்லை பின்னூட்டம் இடவும் முடியவில்லை கொஞம் பாருங்க. நன்றி.
Post a Comment