வெண்ணிலாவின் தேரில் ஏறி...

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!!

மானமுள்ள ஊமைபோல
நானும் கேட்க கூசி நின்றேனே!

நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டு நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!

காலழகும் மேலழகு கண்கொண்டுக் கண்டேன்
அவள் நூல் அறியும் இடை அழகும் நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....

அவள் சிக்கெடுக்கும் கூந்தல் சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல்
கொள்கை மாறாது.

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....

பாடலின் எம்பீ3 வடிவுக்கு

படம்: டூயட் (1994)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரி: வைரமுத்து
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்

8 இசை மழையில் நனைந்தவர்கள்:

Iyappan Krishnan said...

Good song

கானா பிரபா said...

கலக்கல் பாட்டு பாச், ஏ.ஆர்.ரஹ்மான், ஜேசுதாஸ் இணைந்த முதல் பாட்டு என்று நினைக்கிறேன்

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

நன்றி ஜீவ்ஸ்

நன்றிபாஸ்

நன்றி இது நம்ம ஆளு. உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
என்றும் நட்புடன்..
http://eniniyaillam.blogspot.com/

பித்தனின் வாக்கு said...

நானும் பாட்டுப் பாடலாம்ன்னுதான் நினைக்கின்றேன். ஆனா வெண்ணிலாதான் சிக்க மாட்டங்குது. நன்றி புதுகை. நல்ல பாடல்.

வெள்ளிநிலா said...

pls read this blog for 1min
www.vellinila.blogspot.com
thanking you !

pudugaithendral said...
This comment has been removed by the author.