அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
(அதிகாலை சுபவேளை......... )
அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் தனியே
இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப்போகக் கூடாதே
(அதிகாலை சுபவேளை........ )
தென்றல் வந்து தீண்டினால் இந்ததளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
இதை யேசுதாஸ் படிக்கும்போது சூப்பரா இருக்கும்.
நன்றி நிஜம்ஸ்
ம்ம்ம்ம் நல்ல பாடலாத்தான் இருக்க வேண்டும் - நி.ந சொல்லி - புதுகைத்தென்றல் ஆமா சொன்னப்புறம் நமக்கேன் வம்பு - கேட்டுடுவோம்ல
ம் ம்
என்ன ஆச்சோ தெரியல அம்புட்டுத்தேன் சொல்ல முடியும் !
cheena (சீனா) said...
ம்ம்ம்ம் நல்ல பாடலாத்தான் இருக்க வேண்டும் - நி.ந சொல்லி - புதுகைத்தென்றல் ஆமா சொன்னப்புறம் நமக்கேன் வம்பு - கேட்டுடுவோம்ல
athey thanuga anna ingaum
nice song. my fav one :) thanks for posting it
Post a Comment