சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே...!





படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் & சித்ரா


சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே..


மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒருபுறம் நான் அணைக்க...ஆஆஆஆஆஆ
ஒருபுறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே...சங்கத்தமிழ் கவியே


பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தை போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கை தொடத்தான்....காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்


சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே...

3 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

//நிஜமா நல்லவன் at
Labels: மனதில் உறுதி வேண்டும் ///

பாஸுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :))))

pudugaithendral said...

super paatu,


thanks bharathi

thiyaa said...

அருமை