20.கோயி காதா மேன் சோ ஜாதா...

கோயி காதா மேன் சோ ஜாதா... ஆஹா. யாராவது பாடினால்
நான் தூங்குவேன் என்று பொருள்.

பாடுவது யேசுதாஸின் குரலாக இருந்தால்,
தலைவருடும் கைகள் கூடத்தேவையிராது.
தனது குரலிலேயே இனிமையை வைத்திருக்கிறாரே!
இதோ மனதை அமைதி படுத்தும் அந்தப் பாடல்:




Koi Gaata Main So ...


கோயி காதா மேன் சோ ஜாதா
கோயி காதா மேன் சோ ஜாதா
கோயி காதா ......


சன்ஸ்க்ருதி கே விசிதிரித் சாகர் பர்
சப்னோகி நொளகா கே அந்தர்
சுக் துக் கி லஹரோன் பர் உட் கிர்
பஹதா ஜாதா மெயின் சோ ஜாதா.

(கோயி காதா மேன் சோ ஜாதா)


ஆன்கோ மேன் பர்கர் பியார் அமர்
ஆஷிஷ் ஹதேலி மே பர் கர்
கோயி மேரா சிர் கோதி மே ரக்
சஹலாதா மேன் சோ ஜாதா.

(கோயி காதா மேன் சோ ஜாதா)


மேரே ஜீவன் கா காராஜல்
மேரே ஜீவன் கா ஹாலாஹல்- மேரே
மேரே ஜீவன் கா காராஜல்
மேரே ஜீவன் கா ஹாலாஹல்

கோயி அப்னே ஸ்வர் மேன் மதுமை கர்
பர்ஸாதா மேன் சோ ஜாதா.

(கோயி காதா மேன் சோ ஜாதா)

(கோயி காதா மேன் சோ ஜாதா)

மை சோ ஜாதா
மை சோ ஜாதா
கோயி காதா மேன் சோ ஜாதா)
மை சோ ஜாதா


koi gaata main so jaata - 2

sansriti ke vistrit saagar par
sapanon ki nauka ke andar
sukh dukh ki laharon par ut gir
bahata jaata, main so jaata

aankho mein barkar pyaar amar
aashish hatheli mein bhar kar
koi mera sar godhi mein rakh
sahalaata, main so jaata



mere jivan ka kaaraajal
mere jivan ka haalaahal
koi apane svar mein madumay kar
barsatha main so jaata


koi gaata main so jaata


படம்: ஆலாப் (1977)
வரிகள்: ஹரிவன்சராய் பச்சன்.
இசை: ஜெயதேவ்.
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

19.பூவே செம்பூவே..!





Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

18.குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே...



திருச்சி வானொலியில் காலை 6 மணி பக்திமாலை
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள்.

ஆரோக்கியமாதாவைப்பற்றிய அந்தப்பாடல் இதோ.


Get this widget | Track details | eSnips Social DNA



குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே...

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

******************
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே....
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.

இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!
*****************

ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே...
ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே

ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
ஜகத்தின் இராக்கினியே- இந்த
ஜகத்தின் இராக்கினியே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

****************

வேளாங்கன்னி மாதா அருளை
வியந்து போற்றுவோமே!
நாளும் பொழுதும் நாயகி அவளை
நயந்து வாழ்த்துவோமே-என்றும்
நயந்து வாழ்த்துவோமே

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

17.அம்மா என்றழைக்காத உயிரில்லையே...!



படம் : மன்னன்
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்



அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது

(அம்மா என்றழைக்காத.....)

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா என்றழைக்காத.....)

பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா என்றழைக்காத.....)

16.கண்ணே கலைமானே....




படம்:மூன்றாம் பிறை
இசை:இளையராஜா
பாடல்:கண்ணதாசன்
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ்



கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...



கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே


ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...



காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி...


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...

15.துளசி தள முலச்சே சந்தோஷமுகா

இந்தப் பாடல் தியாகராஜரின் கீர்த்தனை. உன்னால் முடியும்
தம்பியின் தெலுங்கு பதிப்பான ”ருத்ரவீணா”வில்
டைட்டில் பாடலாக இந்தப்பாடல் வரும்.

யேசுதாஸின் கர்நாடக இசைப் பயிற்சி இந்தப்பாட்டில்
விளங்கும்.


Get this widget | Track details | eSnips Social DNA





துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து.
துளசி............ சந்தோஷமுகா.


பலுமாரு சிரகாலமு....ஆஆஆஆஆ
பலுமாரு சிரகாலமு பரமாத்முனி பாதமுலனு.
பலுமாரு சிரகாலமு பரமாத்முனி பாதமுலனு.

துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து


சரஸிருக புந்நாக சம்பக பாடல குரவக
சரஸிருக புந்நாக சம்பக பாடல குரவக

கரவீர மல்லிக சுகந்த ராஜ சுமமுலு
கரவீர மல்லிக சுகந்த ராஜ சுமமுலு

தரணிவி ஒக பர்யாயமு தர்மாத்முனி
தரணிவி ஒக பர்யாயமு தர்மாத்முனி

சாகேதபுர வாசுனி - ஸ்ரீராமுனி..
சாகேதபுர வாசுனி - ஸ்ரீராமுனி..
வர தியாகராஜ நுதுனி

(துளசி....... பூஜிம்து)

படம்: ருத்ரவீணா
மொழி: தெலுங்கு
பாடியவர்: யேசுதாஸ்


pallavi

tuLasI daLamulacE santOSamugA pUjintu

anupallavi

palumAru cirakAlamu paramAtmunipAdamulanu

caraNam

sarasIruha punnAga campaka pATala kuruvaka karavIra mallikA sugandha rAja sumamula
dhara nivi oka paryAyamu dharmAtmuni sAkEtapura vAsuni shrI rAmuni vara tyAgarAja nutuni

.

--------------------------------------------------------------------------------

Meaning:
I shall ever be worshipping with joy the Transcendental Lord, the personification of righteousness, this Prince of Ayodhya (kingdom where Rama lived), with tender tulasi (a type of sacred basil) leaves. I shall garland Him with fragrant flowers like the lotus, punnaga, campaka, jasmine, and lily.

14.செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...!



படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)


பி.கு: புதுகைத் தென்றல் அக்காவிற்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அவங்களுக்காக இந்த பதிவு. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.