SwamiAyyappan-Thir... |
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்குதிருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)
உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஉரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணாஇரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஇந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணாதேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)
தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயேகணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயேஅனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)
ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனிவருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)
ஸ்ரீமன் நாராயணாஸ்ரீபதி ஜெகன்னாதாவருவாய்
திருமாலே - துணைதருவாய்
பெருமாளே.
***********************************************************
படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
7 இசை மழையில் நனைந்தவர்கள்:
யேசுதாஸ் அவர்கள் புகழ் பாடும் தளம் நன்றாக இருக்கிறது. முதல் பாடலே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா.
pottu thakkunga ;-)
வாங்க நிஜமா நல்லவன்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ஆஹா வாங்க பிரபா,
போட்டுத்தாக்கிடுவோம்.
நன்றி
தாஸண்ணாவின் அருமையான, இனிமையான தளம். யாராவது தாஸாண்ணாவிற்க்கு தனித்த்ளம் ஆரம்பிக்க மாட்டார்களா என்று நான் மிகவும் ஏங்கியதுண்டு. தாமதமாக இங்கே வந்ததற்க்கு மிகவும் வருந்துகிறேன். தாஸண்ணாவின் தாய்மீது பாடும் சோகப்பாடல்கள் எக்கச்சக்கம் அனைத்தயும் பதியுங்கள். பாலுஜியின் அபிமான பாடகர் தாஸண்ணா என்று அவரால் அழக்கப்படும் இந்த தளத்திற்க்கு அவர் சார்பாகவும் அவர் ரசிகர்கள் சார்பாகவும் என் வாழ்த்துக்கள்.
யாராவது தாஸாண்ணாவிற்க்கு தனித்த்ளம் ஆரம்பிக்க மாட்டார்களா என்று நான் மிகவும் ஏங்கியதுண்டு.
வாங்க கோவை ரவி,
நானும் ஏங்கிகிட்டு இருந்து, கூட்டு சேர்ந்து ஆரம்பிச்சுட்டேன்.
வருகைக்கு நன்றி.
முடிந்த வரை யேசுதாஸ் பல மொழிகளில் பாடிய பாடல்களும் இடம் பெறச்செய்வதாக திட்டம்.
நீங்கள் கூறியுள்ள பாடல்களும் தொகுப்பேன். தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
Post a Comment