ஓ நெஞ்சமே என் பாடலை



அழகான குரல்களில் அமைதியான பாடல்.

படம்: பாசக்கனல்
நடிகர்: நிழல்கள் ரவி
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்:எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்:1989



ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கைகோர்த்து நான் சென்ற காலங்கள்
மெய்யன்பின் மாறாத தின்னங்கள்
நீ கொண்ட வேறான என்னங்கள்
நிஜமென்றல் பெண்மைக்கு துக்கங்கள்

அறியாத பருவம் அல்ல எனது அன்பு கொண்டு
புரியாத பெண்மை உன்னை நான் என்ன சொல்வது

அன்பு கொண்டு பேசினால்
ஆசையென்று ஆகுமா
ஆண்களூக்கு ஆயிரம்
அர்த்தம் அது கூடுமா?

காலங்களின் கோலம் இது

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே

கனவோடு என் காதல் தீயாச்சு
கதை போல என் வாழ்வும் வீணாச்சு
விதை போட மரம் வேறு உண்டாச்சு
உயிர் கூடு புயல் வந்து பாழாச்சு

விதையென்ற கேள்வி ஒன்றை
ஏன்  நீ கேட்க வேண்டுமா
விளையாட்டு தோழன் உன்னை
என் மனம் ஏற்க வேண்டுமா

காத்திருந்த ஆண் கிளி
நேற்று தூங்கிப் போனது
பார்த்திருந்த வென் புறா
கைப் பிடித்து சென்றது

போதும் விடு போராட்டமே

ஓ நெஞ்சமே என் பாடலை நான் பாடுவேன்
கேள் கொஞ்சமே
இதயத்தை எங்கோ சிறையிலிட்டேனே
தனிமைக்கு என்னை விலைக்கொடுத்தேனே
என்னை மறந்தேனே

பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம்







பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாசின் அவர்களின் க்ளாசிக் வாரம் வானொலி தொகுப்பை  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியுள்ளார். தாஸண்ணாவின் அருமை பெருமைகளை அனைவரும் தெரிந்திருந்த தகவல்கள் தான். இருந்தாலும் அவருடன் பணியாற்றிய போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லுகிறார்கள் அவரின் அபிமான நட்சத்திரங்களான டைரக்டர் திரு.பாசில், பாடகி ஜென்சி, அவர் புதல்வர் திரு.விஜய் யேசுதாஸ் ஆகியோர். நான்கு ஒலித்தொகுப்புகள் அனைத்தும் அருமையான பாடல் பொக்கிஷம் கேளூங்கள் அன்பர்களே. உஙக்ளூக்காக இதோ...






1.இன்று சொர்ர்கத்தின் திறப்பு விழா
2.நீலநயனங்க்ளில் ஒரு நீண்ட கனவு
3.தங்கத்தில் முகம் எடுத்து
4.அழகெனும் ஓவியம் இங்கே
5.தங்கத்தோனியிலே தவளும்
6.நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம்
7.திருமாளின் திருமார்ப்பில்
8.கங்கைநதி ஓரம் ராமன்
9.வானம் எனும் வீதியிலே
10.நாளை உலகை ஆளவேண்டும்





1010 KJJ-1

1.என்ன பார்வை உந்தன் பார்வை
2.கங்கை யமுனை இங்குதான்
3.ஸ்ரீதேவி என் வாழ்வில்
4.நல்ல மனம் வாழ்க
5.தீர்த்தகரைதனிலே சென்பக புஷ்பங்களே
6.என்ன சுகம் என்ன சுகம்
7.ஆகாயம் மேலே பாதாளம் கீழே
8.நினைவாலே சிலை செய்து
9.உன்னிடம் மயங்குகிறேன்





1011 KJJ-2

1.மீன் கொடி தேரில்
2.மனைவி அமைவதெல்லாம்
3.உறவுகள் தொடர்கதை
4.பூவிழி வாசலில் யாரடி வந்தது
5.ஏரிக்கரை பூங்காற்றே
6.வேதம் நீ இனிய நாதம் நீ
7.கிண்ணத்தில் தேன் வடித்து
8.கன்னன்  ஒரு கைகுழந்தை
9.செந்தாழம் பூவில் வந்தாடும்





1012 KJJ-3

1.ஏதோ நினைவுகள் கனவுகள்
2.என் இனிய பொன் நிலாவே
3.பொன்னான மேனி உல்லாசம்
4.கனவென்னும் ஆலைக்குள்
5.நிலை மாறும் உலகில்
6.மாலை பொன்னான மாலை
7.பூபாளம் இசைக்கும்
8.மூக்குத்தி பூமேலே
9.வெச்சப்பார்வை தீராதடி
10.காக்கை சிறகினிலே நந்தலாலா

நன்றி: பாசப்பறவைகள் தளம்

வண்ண மொழி மானே




 
படம்: சேதுபதி ஐ.பி.எஸ்
நடிகர்: விஜயகாந்த், மீனா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வருடம்:1994






வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னைச் சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காலை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ணனியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துளங்கும் சக்தி நீயாகும்

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

ஓஹோ ஓஹோ ஓஹோ..ஓஹோ ஓஹோ ஓஹோ
கஸ்தூரி என்றொரு குலப் பெண் தானம்மா
கணவன் காந்தி புகழ் பேர வைத்தாள்
நாகம்மை என்றொரு தமிழ் பெண் தானம்மா
தந்தை பெரியார் பெருமையை காத்தாள்
நாவீரன் நேருவின் ஆதாரம் தான்
அஞ்சாத மனைவியின் அன்பு மனம் தான்
கமலா நேரு அவள் பேர் தானம்மா
புகழ்ந்தே பேசும் இந்த ஊர் தானம்மா
அதுபோல் எனக்கு நீதான் ஆதாரம்

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

கண்ணே உன் நாயகன் காவல் துறையிலே
கடமை உணர்ந்து உழைத்திடும் போது
ஊராரை காத்திடும் உயர்ந்த பணியிலே
இரவோ பகலோ உறக்கம் ஏது
காற்றோடு இடி மழை வந்தாலுமே
காப்பாற்ற போவது எங்கள் இனமே
காவல் காரன் தோளில் சுலபம் அல்ல
வார்த்தை ஏது இதன் புனிதம் சொல்ல
ஒரு நாள் எனைத்தான் தேசம் பாராட்டும்


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னை சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காலை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ண்னியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துளங்கும் சக்தி நீயாகும்


வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
வண்ண மொழி மானே வெள்ளி மீனே

பாடலை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை



//வரி போடாத அரசாங்கம் இல்ல .. பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல ..
கண்ணுக்குள்ள சுமந்தேன் .. ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்//

இனிமையான சோகப்பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


படம்: மக்கள் ஆணையிட்டால்
நடிகர்கள்:விஜயகந்த், ரேகா
இசை:எஸ்.ஆ.ராஜ்குமார்
இயக்குநர்: ராம நாராயணன்.

ரொம்ப நாள் கழித்து தாஸண்ணாவின் குடிகாரன் பாட்டு சில மெட்டுக்களுடன்
இது போன்ற பாடல்கள் மிகவும் அருமையாக பாடியிருப்பார். ரொம்ப ரசிச்ச பாடல்
நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

படம்: மக்கள் ஆணையிட்டால்
பாடியவர்: டாக்டர்.கே.ஜே. யேசுதாஸ்.

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் ஹ்ஹ

பஞ்சுப்பொதி பக்கத்தில தீயும் இருக்கு
அது பத்தவில்ல பாசம் எனும் ஈரம் இருக்கு
நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசம் இருக்கு
என்னை வஞ்சம்ன்னு தள்ள என்ன நியாயம் இருக்கு
வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல

வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல
கண்ணுக்குள்ள சுமந்தேன்
ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்

சொத்துக்காக பரமேசன் மண்ணை சுமந்தான்
ஏசு தத்துவத்தை காப்பாத்த சிலுவை சுமந்தான்
பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள்
நான் பட்ட கடன் தீரவில்லை உன்னை சுமந்தேன்
என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை

என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை
துண்பத்துக்கும் சிரிச்சேன்
அடி அன்புக்குதான் அழுதேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல.... தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்.


ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் பாடல் இங்கே

வாழ்த்துக்கள் கானக்கந்தர்வனே!!

கானக்கந்தர்வன் பாடகனாக அவதாரம் எடுத்து இன்றோடு 50 வருடங்கள் முடிகின்றன.
யேசுதாஸ் அவர்கள் தாய் மொழி மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு,
கன்னட,பெங்காலி, உருது, ஹிந்தி, ஒரியா,குஜராத்தி, துலு, ரஷ்ய மற்றும் மராத்தி
மொழியில் இதுவரைக்கும் 50,000 பாடல்கள் பாடியிருக்கிறார்.

கடந்த 5 தசாப்தங்களாக தனது மயக்கும் குரலால் நம்மை மனதுக்கு
இதமளித்து வரும் இந்நந்நாளில் அவருக்கு கானக்கந்தர்வன் வலைப்பூவின்
சார்பில் வாழ்த்துக்கள். பத்மபூஷன் போன்ற பல விருதுகளையும்,
சிறந்த பாடகருக்காக பல மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.





மானிட சேவை துரோகமா???

இன்று பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்தநாள். உன்னால் முடியும் தம்பி
படத்தில் யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த அருமையான பாடல்
கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவாக வெளிவருகிறது.

ஒரு அருமையான கர்னாடக கச்சேரி போன்றே தனி ஆவர்தனம்
என கலக்கல் பாட்டு இது.



மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்

வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.......
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா... ஆஆஆ

வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்

நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.



படம்: உன்னால் முடியும் தம்பி
பாடியவர் : யேசுதாஸ்
இசை: இளையராஜா

அடி கானக்கருங்குயிலே.....



மாப்பிள்ளை நல்ல புள்ள ஆமா.. ஆமா..ஆமா

மணப்பொண்ணு சின்னப்பொண்ணூ
மனம் போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது
கனவும் பலிச்சது கல்யாணம் முடிஞ்சது

தானத்தந்தர தான

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

ஜாதி ஆண்ஜாதி இவ உன் பொண்ஜாதி
இனிமே வேறேதும் ஜாதி இல்ல
பாதி உன் பாதி மானம் மருவாதி
நாளும் காப்பாத்தும் கன்னிப்புள்ள
சொன்னதைக்கேளு மன்னவன் தோளு
இன்பத்தை காட்டும் பாருபுள்ள
சிந்திச்சுப்பாத்து சொந்தத்தைச் சேத்து
பெத்துக்க வேணும் முத்துப்புள்ள

நீதான் இல்லாது நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் ஏதோ ஏக்கதுல
அடி- பரிமாறு மச்சானைப்பாத்து
பாய்போட்ட கூட்டுக்குள்ள

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

பாசம் அன்போட பழகும் பண்போட
நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனிஉந்தன் கண்ணுக்குள்ள

சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்னப்பொண்ணு
இனிமே ரண்டல்ல இதயம் ஒண்னாச்சு
இரவும் பகல் எல்லாம் இன்பமுண்டு
நினைச்சா நெஞ்சல்லாம் நெரஞ்சு பொங்காதோ
நெதமும் சுகமுண்டு சொர்கமுண்டு
ஒரு இலைபோட்டு போடாத சோறு
எடுத்துண்ணும் நேரம் இன்று

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே கச்சேரி
வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து வெச்சு
கைராசி பாக்கப்போறேன்


படம்:பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

door hamse

Bommelenni chesina...





Film: BObbili dora

sung by: yesudas

Music: koti

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா...




சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மத காவியம் மூடியதேன்
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
கீர்த்தனை பாடியதேன்.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு


தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே!
என் உயிர் தேசத்து காவலனே!

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடம் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

படம்: பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: யேசுதாஸ். சுசீலா

இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா





கானகந்தரவன் திரு.கே.ஜே.யேசுதாஸண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களூக்கு பாடீய இனிய கானங்கள் எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் சென்னை வானொலி ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அழகிய கவிதை தொகுப்புக்கள் கோவை வானொலி ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அவரின் தொகுப்புக்களை இங்கேயும் ஒலிபரப்புகிறார்கள் இதோ நான் நேற்று ரசித்த தொகுப்பு நீண்ட நாள் கழித்து அவரின் கவிதை
தொகுப்புகளூடன் இனிய பாடல்களையும் கேட்டேன் இதோ இணையதள ரசிகர்கள் உங்கள் செவிக்கும் விருந்து. கேட்டு மகிழுங்கள் உங்கள் உன்னதமான உணர்வுகளையும் எழுதுங்கள். இந்த ஒலித்தொகுப்பை திறம்பட வழங்கிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி.

1.என்னை விட்டால் யாரும் இல்லை
2.நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
3.போய்வா நதியலையே
4.இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
5.என்ன சுகம் என்ன சுகம்
6.விழியே கதை எழுது
7.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
8.அழகெனும் ஓவியம் இங்கே
9.இதுதான் முதல் ராத்திரி

வினை தீர்க்கும் நாயகனே வினை தீர்க்கும் நாயகனே




வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே

வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!

கஸ்தூரி மஞ்சள் உமையாளின் கைபட்டு
உருப்பெற்று உயிர் பெற்று கணபதியானாய்
உலகின் அதிபதியானாய்
நீயோ தாய் காத்த தனயன் உன்
தலை கொய்த பரமன் கஜராஜன் தலைவைத்த
கஜபதியானாய் உலகின் அதிபதியானாய்

உனை நாடும் பக்தர்க்கு உன் கர்ப்பகிரஹம்
உள்ளே அமர்ந்துள்ள நீயே சொர்க்கம்
எப்பூஜைக்கும் நீ அகரம் உனக்குத் தோப்புக்கரணம்
நான் போட நல் வாழ்வு அருளனும்

வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே......

வானாக மண்ணாக நீராக காற்றாக
நெருப்பாக உருவான கணநாயக -பஞ்சமுக நாயக
நீ என் ஊனாக உணர்வாக உடலாக உயிராக
உறவோடு உறவான குணதாயக - பிரணவ அருள்நாயக
பிறப்பே இல்லானே எடுத்துக்கொள்ளு
இப்பிறப்பில் தான் முக்தியை கொடுத்தருளு
உன் தும்பிக்கை என் அபயம்
என் வாழ்க்கை உன் உபயம்
நான் உன்னை பாட பக்தி உதயம்

வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே

வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!

பாடியவர் : யேசுதாஸ்
பாடல் இசை: கங்கை அமரன்

Yesudas English Song Ahimsa Ahimsa Ahinsa





கானகந்தர்வன் குரலில் அருமையான ஆங்கிலப்பாடல்.
இசையின் அடுத்த பரிமாணமாக இசையையே மொழியாக கொண்ட கந்தர்வனுக்கு
இந்த பதிவு சம்பர்ப்பணம்.


படம்: காந்தி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

Latin song by Dr.K.J.Yesudas



super hit telugu song



பூ பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது



பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகை போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது.....

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

பறவைப்போல பறந்த வானில் பறந்து செல்கின்றோம்
பசியைக்கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை தூங்கிக்கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் மூடிக்கொள்கிறோம்

மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது.......

படம்: கதாநாயகன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: சந்திரபோஸ்

முத்தமிழ்க் கவியே வருக.....முக்கனி சுவையே வருக





முத்தமிழ்க் கவியே வருக
முக்கனி சுவையே வருக
முத்தமிழ்க் கவியே வருக
முக்கனி சுவையே வருக
காதல் எனும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது

முத்தமிழ்க் கலையே வருக
முக்கனி சுவையும் தருக
காதல் எனும் தீவினிலே
காலங்கல் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக.. ஓஓ


காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்

மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
தேனோடு நீ ஆட ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள் நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ

ஆஆ... முத்தமிழ் கலையே வருக
முக்கனிச்சுவையும் தருக

சங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..ஆ

முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ ஓ ஓ
படம்: தர்மத்தின் தலைவன்

இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

DARI CHOOPINA DEVATHA I CHEYEI ENNADU VEEDAKA....



దారి చూపిన దేవతా
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA (2)
janma janmaku tODugA nA dAnivai nuvvu naDichirA
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

manasulEni Silanu nEnu nuvvu chUsina ninnalO
mamata telisi manishinaiti challani nI chEtilO
kannu terichina vELalO nIkEmi sEvanu chEtunu
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

marapu rAdu mAsipOdu nEnu chEsina drOhamu
kalana kUDa maruvanammA nuvvu chUpina tyAgamu
prEma nErpina pennidhi A prEma ninu dIvinchani
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA
janma janmaku tODugA nA dAnivai nuvvu naDichirA
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

படம்: கிருஹப்ரவேசம்,

பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்..... கானமழை தூவும் முகில் ஆடல்கள்.



ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்...

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாறையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சம் இசையால் சாந்தி பெறும்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது

குரலில் தேன்குழைத்து குயிலைப் படைத்தவர் யார்?
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்?
அலையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகின்றேன்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது



படம்: இது நம்ம பூமி,
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

வேதம் நீ..இனிய நாதம் நீ





வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)


கருணை மேவும் பூவிழிப்பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய் (2)
இளைய தென்றல் காற்றினிலே..ஏ...
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

(வேதம் நீ..)

அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் (2)
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ(2)
மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அறியும் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

(வேதம் நீ..)

படம்: கோயில்புறா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா