அடி கானக்கருங்குயிலே.....மாப்பிள்ளை நல்ல புள்ள ஆமா.. ஆமா..ஆமா

மணப்பொண்ணு சின்னப்பொண்ணூ
மனம் போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது
கனவும் பலிச்சது கல்யாணம் முடிஞ்சது

தானத்தந்தர தான

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

ஜாதி ஆண்ஜாதி இவ உன் பொண்ஜாதி
இனிமே வேறேதும் ஜாதி இல்ல
பாதி உன் பாதி மானம் மருவாதி
நாளும் காப்பாத்தும் கன்னிப்புள்ள
சொன்னதைக்கேளு மன்னவன் தோளு
இன்பத்தை காட்டும் பாருபுள்ள
சிந்திச்சுப்பாத்து சொந்தத்தைச் சேத்து
பெத்துக்க வேணும் முத்துப்புள்ள

நீதான் இல்லாது நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் ஏதோ ஏக்கதுல
அடி- பரிமாறு மச்சானைப்பாத்து
பாய்போட்ட கூட்டுக்குள்ள

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

பாசம் அன்போட பழகும் பண்போட
நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனிஉந்தன் கண்ணுக்குள்ள

சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்னப்பொண்ணு
இனிமே ரண்டல்ல இதயம் ஒண்னாச்சு
இரவும் பகல் எல்லாம் இன்பமுண்டு
நினைச்சா நெஞ்சல்லாம் நெரஞ்சு பொங்காதோ
நெதமும் சுகமுண்டு சொர்கமுண்டு
ஒரு இலைபோட்டு போடாத சோறு
எடுத்துண்ணும் நேரம் இன்று

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே கச்சேரி
வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து வெச்சு
கைராசி பாக்கப்போறேன்


படம்:பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

சேக்காளி said...

அடுத்து என்ன "கஸ்தூரி மானே கல்யாண தேனே" பாடலா?

pudugaithendral said...

வாங்க சேக்காளி,

அடுத்த பாடல் இன்னும் யோசிக்கலை. நீங்க சொன்னதையும் போடுறேன்

வருகைக்கு நன்றி

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Pasu said...

ITHU ENNA PADAM?