படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்
(தென்பாண்டித் தமிழே...)
வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே 
நீ என்றும் வாழ வேண்டுமே
(தென்பாண்டித் தமிழே...)
தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
வாழ்த்துவேன் உனை போற்றுவேன் 
வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே 
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே
(தென்பாண்டித் தமிழே...)
Blessed with a velvety voice
14 years ago
 
 
 
 Posts
Posts
 
 
 

4 இசை மழையில் நனைந்தவர்கள்:
’எதுவும்’ இல்லாத
நல்ல பாடல் :)
கேட்டேன் ரசித்தேன்.
நன்றி.
neenga passakara pullanu nirrubichitinga.......
Post a Comment