கண்மணியே ராதை எனும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க கவலைகளை விட்டு விடு
காற்சத
ங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் நடை தான் பயில
கத்தும் கடல் நீரலை போல் இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது இமை தான் விரிய
காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
முன்னம் பல ஜென்மம் வழியே உண்டானது உன் உறவே
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
தாக்கு தணகு தரிகிட தகதிமி தீக்கு தணகு தரிகிட தகதிமி
தகிட தீம்த தாம் தாம் ததீம்த தீம்த ஜணுத தாம் தாம் ததீம்த
தாம் தரிகிடதாம் ததீம்த ததீம்த
தீம் தரிகிடதை ததீம்த ததீம்த
தாம்த தகிடதக தாம்
தீம்த தகிட தக தீம்
சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
காத்திருப்பான் கை அணைக்க காதலியால் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க காதலியால் மெய் அணைக்க
கண்ணன் மனம் அந்தப்புரமே வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே அவன் தாள் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்......காதல் வேதம்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
படம் : வருஷம் 16
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்
2 இசை மழையில் நனைந்தவர்கள்:
கானக்கந்தர்வனின் குரலில் எவர்கிரீன் பாடல்...
நன்றி
மிகவும் நன்று
Post a Comment