உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே..?




படம்: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே


வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா


ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்


(ஓ ஓ ஓ ஓ...)


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே


தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன


துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்


(ஓ ஓ ஓ ஓ...)


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

ஜேசுதாஸின் உறவுகள் வரிசை பாடலில் மற்றுமொரு ஹிட் :)

//தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன //

அழகான வரிகள் !

pudugaithendral said...

super paatu

கானா பிரபா said...

கலக்கல் தல

Mohan kumar said...

nice lyrics in soulful voice

swartham sathsangam said...

சக்கரங்களில் அன்னை இருக்கிறாள். என்பது உண்மைதான். குண்டலினி எனும் சக்தியாய் மூலாதாரத்தில் சர்ப்பமாய் சுருண்டு உறங்கியிருக்கும் அன்னை
யோகியின் தொடர்ந்த பயிற்சியால் சகாஸ்ராரத்தில் வீற்றிருக்கும் இறைவனுடன் கூடிகளிகிறாள். அப்போது தான் இறைவனுடன் ஆன்மா கலத்தல் என்பது உண்டாகிறது. வரும் பதிவுகளில் இதை பற்றி நிறைய எழுத இருக்கிறோம். இப்போதைக்கு சக்கரங்களை பற்றிய அடிப்படை விளக்கங்கள் தான் இது. நன்றி தென்றல் அவர்களே