Get Your Own Hindi Songs Player at Music Pluginமரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.
கோலம்........ திருக்கோலம்....
(மரகத வள்ளிக்கு மணக்கோலம்...)
காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பால்
மாலையில் மல்லிகையில் முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித்தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ?
கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ?
தினம் தோறும் திருநாளோ!!!
மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.
கோலம்........ திருக்கோலம்....
ஆ ஆ ஆஅ ஆ.....ஆ...
மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்துவிட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்
எந்தன் வீட்டுக் கன்று இன்று எட்டி எட்டிப்போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப்பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது...
மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.
கோலம்........ திருக்கோலம்....
**********************************
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்
படம்: அன்புள்ள அப்பா
இயக்கம். ஏ.சி. திரிலோக சந்தர்.
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம்:1987
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
Oh nice song madom...thank you so much
கலக்கல் பாட்டு...
அப்பாவுக்கான தாலாட்டா பெண்கள் நினைக்குறது இந்த பாட்டை மாத்திரம் தானா?
வேற பாடல்கள் ஏதும் அப்பா பாடுறதா வந்திருக்குதா.. முரளி கண்ணனை எடுத்து எழுத சொல்லனும் :)
பகிர்விற்கு நன்றி!
//சென்ஷி said...
கலக்கல் பாட்டு...
அப்பாவுக்கான தாலாட்டா பெண்கள் நினைக்குறது இந்த பாட்டை மாத்திரம் தானா?
வேற பாடல்கள் ஏதும் அப்பா பாடுறதா வந்திருக்குதா.. முரளி கண்ணனை எடுத்து எழுத சொல்லனும் :)
பகிர்விற்கு நன்றி!///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே!!
கூட நல்லா இருக்கும்
அனைவருக்கும்,
வருகைக்கு மிக்க நன்றி
//வேற பாடல்கள் ஏதும் அப்பா பாடுறதா வந்திருக்குதா.. முரளி கண்ணனை எடுத்து எழுத சொல்லனும் :)//
//டாடி டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே!!
கூட நல்லா இருக்கும்//
அன்புள்ள அப்பா படத்துல இதே தலைப்பில் நம்ம தலைவர் பாட்டு கூட இருக்குப்பா. தாஸண்ணா குரல் மாதிரி அந்த பாடலும் மனசை என்னென்னவோ பன்னும். நல்ல பாடல் தெரிவு. வாழ்த்துக்கள்.
Post a Comment