Get Your Own Hindi Songs Player at Music Plugin
பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)
படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகளை மடலிட்ட ஆரோக்கிய ரோமுலஸிற்கு நன்றிகள்
சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)
சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)
5 இசை மழையில் நனைந்தவர்கள்:
புது பாடல்களில் மிகவும் கிறங்கிய பாடல்களில் ஒன்று.
அருமையான மயக்கும் பாடல்!
மனம் மகிழும் பாடல்!!
மிகவும் ரசித்தேன்11
மிக்க நன்றி
நல்ல பாடல் தந்ததற்கு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு அமைதியான ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார் தாஸண்ணா பகிற்விர்க்கு மிக்க நன்றி.
Post a Comment