சின்னச் சின்ன ரோஜாப்பூவே

குழந்தைகள் தின சிறப்புப் பாடலாக மலர்கிறது
இந்தப் பாடல்


பூவிழி வாசலிலே திரைப்படத்திலிருந்து மிக
அழகான இந்தப் பாடல் கானகந்தர்வனின் குரலில்.




சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?

சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை?
இள நெஞ்சில் வேதனை

சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?


சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன? என்ன? ஆசையுண்டோ?
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே!
ஊரும் இல்லை பேரும் இல்லை.
உண்மைசொல்லை யாரும் இல்லை.


நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா!
சோலை கிளி போலே என்
தோளில் ஆடடா!
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்


சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?


கண்ணில் காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னைவிட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததன்று எண்ணுகிறேன்
வாழ்த்து சொல்லி பாடுகிறேன்

கங்கை நீ என்றால் கரை
இங்கு நானடா
வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா

என் வாழ்வில் நிம்மதி
அது உந்தன் சன்னதி

சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?
சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை
இள நெஞ்சில் வேதனை

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

RAMYA said...

மங்களூர் சிவா வணக்கம்.
உங்க பதிவை (காணகந்தர்வன்)
இப்போதான் படிச்சேன்,
அருமையான் மெட்டுக்களை அழகாக தொகுத்து இருக்கீங்க.
வாழ்த்துக்கள்

தமிழ் தோழி said...

உன்மையாகவே இசை மழையில் என்னை நனைய வந்ததற்கு நன்றி.

Anonymous said...

மனதை வசியப்படுத்தும் அமைதியான பாடல் வழங்கியதற்க்கு மிக்க நன்றி.

மே. இசக்கிமுத்து said...

பாடல் வரிகளையும் தந்து கலக்கிட்டீங்க!!