பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு




பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா.....

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
கான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல்லழகே
நல்லழகே
ஊறுசுவையே கண்ணம்மா....


காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நாதவடிவானவளே... நல்ல உயிரே... கண்ணம்மா.

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு


படம்: ஏழாவது மனிதன்(1982)
பாடல் வரிகள்: பாரதியார்
இசை: எல்.வைத்தியநாதன்.

0 இசை மழையில் நனைந்தவர்கள்: