கொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே



கொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே

Get this widget | Track details | eSnips Social DNA

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!



ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே....
சுகம் உறவாட தேடுதே .....
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

மாலை நேரக் காற்றில்
அசைந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
என ஆளும் தெய்வம் நீயே!!

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை,
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே!!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம், காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி
இசை: இளையராஜா

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி



இனிமையான பக்தி பாடலின் ஆல்பம் பற்றிய தகவல்கள் தெரியவில்லை தாஸண்ணா ரசிகர்கள் தரலாமே?

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

சங்கீத சாகித்ய ஸ்வரலய ஞானம்
சங்கீத சாகித்ய ஸ்வரலய ஞானம்
சாரீரம் வளம் பெறும் இம்மையில் சேரும்
சாரீரம் வளம் பெறும் இம்மையில் சேரும்
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

மதுரை அரசி மீனாட்சி தேவி
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் தெரியும் இசைப்பாடும்
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் தெரியும் இசைப்பாடும்

கன்னித்தமிழ் தேனே கருணை புரிவாய்
கன்னித்தமிழ் தேனே கருணை புரிவாய்
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தரவேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தரவேண்டும்

மாளவன் சோதரி உமா மகேஸ்வரி
மாளவன் சோதரி உமா மகேஸ்வரி
மங்கலம் தூங்கும் ஸ்ரீபுவனேஸ்வரி
மங்கலம் தூங்கும் ஸ்ரீபுவனேஸ்வரி

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்......




ஆ...ஆ...ஆஆ.


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.


பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன?
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன?
ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்.
மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்.
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி..
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்
நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூரட்டுமா
கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயமல் பாயுதம்மா

பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

படம்: எங்க முதலாளி
பாடியவர்கள்:கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

ஏதோ நினைவுகள்.... கனவுகள்




ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

மார்பினில் நானும் மாராமல் சேரும்
காலம் தான் வேண்டும்...ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்....ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்...ம்ம் சேரும் நாள் வேண்டும்.

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்...ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா... ஆனந்தம்...
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்..ம்ம். ஏக்கம் உள்ளாடும்...ம்ம்


படம்: அகல்விளக்கு,
பாடியவர்:கே.ஜே யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா

அகரம் இப்போ சிகரம் ஆச்சு...!



படம்: சிகரம்
பாடல்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: எஸ்.பி.பி


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

(அகரம் இப்போ...)

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ...)

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ...)

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே?
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ...)

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
(ஆசை..)

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே
(ஆசை..)

பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வலைந்திடுவோம்
நாணலை போல் தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்
(ஆசை..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: K J ஜேசுதாஸ்